எங்கள் ஊர்
Posted by S1 SYSTEMS on 21:30:00
அனைவருக்கும் வணக்கம்,
பூமுடையான்பட்டி என்ற இந்த இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். அரியலூர் மாவட்டம் , அரியலூர் வட்டம், கடுகூர் பஞ்சாயத்தில் உள்ள அழகிய கிராமம் எங்கள் கிராமம். வடக்கே தலையாரிக்குடிக்காடு கிராமமும், கிழக்கே கடுகூர் கிராமமும், மேற்கே கடுகூர் பொய்யூர் கிராமமும் , தெற்கே மணக்குடி கிராமமும் எங்களுக்கு எல்லைகள் ஆகும். சுமார் 70 வீடுகளுடன் 400 பேர் மக்கள் தொகையுடன் வசிக்கும் எங்களுக்கு விவசாயம் தான் வாழ்வாதாரமாக விளங்குகிறது. எங்கள் ஊருக்கு மிக மிக அருகில் தான் ” சின்னத்திருப்பதி “ என்றழைக்கப்படும் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருத்தலம் உள்ளது.ஊரைச்சுற்றி அரசு சிமெண்ட், அல்ராடெக் சிமெண்ட், ராம்கோ சிமெண்ட், செட்டிநாடி சிமெண்ட், ஜேப்பியர் சிமெண்ட் போன்ற பல சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளது.ஊரில் பல சிறப்புகள் இருந்தாலும் கோடைகால வறட்சியிலும் வற்றாத ‘கூழாக்குளம்’ ஏரிதான் எங்கள் ஊரின் தனிச்சிறப்பு.